Breaking News

நெட்டப்பாக்கம் பகுதியில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்ற மளிகை கடை வியபாரி கைது..

 


புதுவை மாநிலம், நெட்டப்பாக்கம் அருகே உள்ள ஏரிப்பாக்கம் நான்கு முனை சந்திப்பில் மளிகை கடை நடத்தி வருபவர் நத்தமேடு பகுதியை சேர்ந்த அபிமன்யு.

நேற்று மாலை மடுகரை போலீசாருக்கு இவரது மளிகை கடையில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பதாக தகவல் கிடைத்தது. மடுகரை உதவி ஆய்வாளர் குப்புசாமி மற்றும் போலீசார் கடைக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த கடையில் இருந்து குட்கா, ஹோன்ஸ், விமல்பாக்கு உள்ளிட்ட 280 பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அபிமன்யுவை நெட்டப்பாக்கம் காவல் நிலையம் அழைத்து சென்று அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவரிடம் இருந்து 1லட்சத்து 30ஆயிரம் ரொக்கம் மற்றும் 40 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கிராமபுறப் பகுதியில் லட்சக்கணக்கில போதை பொருட்கள் கிடைப்பது குறித்து பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

No comments

Copying is disabled on this page!