நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு கவர்னர் கைலாஷ் நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை..
புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி லாஸ்பேட்டை உழவர் சந்தை அருகே உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் கவர்னர் கைலாஷ் நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம்,அமைச்சர் சரவணன் குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி தலைமையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் கந்தசாமி உட்பட காங்கிரஸ் கட்சியினர் நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பாஜக சார்பில் அதன் மாநில தலைவர் செல்வகணபதி தலைமையில் பாஜக நிர்வாகிகள் நேதாஜி சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
இதேபோல பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்பு சார்ந்த நிர்வாகிகள் நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
No comments