ஜி.கே.வாசன் பிறந்தநாள் விழா: தூத்துக்குடியில் தமாகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!
தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மத்திய மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் தலைமையில் தமாகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் 60ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மத்திய மாவட்ட அலுவலகத்தில் மத்திய மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர். விஜயசீலன் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில், மாநில இணை செயலாளர் திருப்பதி, மாநில செயற்குழு உறுப்பினர் ரவிக்குமார், தெற்குமாவட்டத் தலைவர் சுந்தரலிங்கம், மாவட்டதுணைத் தலைவர் பெஸ்கிராஜா, பொதுசெயலாளார் ராஜ்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் பொன்ராஜ், மாவட்ட செயலாளர் சீனிவாசன், ஆழ்வைவட்டார தலைவர் பொன்ராஜ், இளைஞரணி பொதுசெயலாளார் பிரவீன், மாவட்ட செயலாளார் தினகரன், மாநகர செயலாளார் ரவீந்திரன், தொழிலாளார்அணி தலைவி வீரலெட்சுமி, சாயர்புரம் தினகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments