மாநில அளவில் ஓவியத்தில் முதலிடம் பெற்ற அரசு பள்ளி மாணவருக்கு முன்னாள் மாணவர்கள் பாராட்டு.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வருபவர் மாணவர் பழனி சண்முகம், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக நடைபெற்று வரக்கூடிய கலைத் திருவிழாவில் பானை ஓவியம் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற மாணவரை பள்ளியின் முன்னாள் மாணவர்கள் திரு. செல்வ பெருமாள், திரு. டேனியல் ஆசீர், திரு. தெய்வீந்திரன், மற்றும் பள்ளியின் முதுகலை பொருளாதார ஆசிரியர் திரு பொன்னுசாமி ஆகியோர் மாணவனின் இல்லத்திற்கு நேரடியாக சென்று பொன்னாடை அணிவித்து இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அப்போது மாணவனின் பெற்றோரும் உடன் இருந்தனர், கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரக்கூடிய கலைத் திருவிழா போட்டியிலும் மாணவர் பழனி சண்முகமே முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments