Breaking News

முதலியார் பேட்டை தொகுதி அதிமுக சார்பில் சமத்துவ பொங்கல்முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினார்.

 


முதலியார் பேட்டை தொகுதி அதிமுக சார்பில் சமத்துவ பொங்கல்முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினார்.


புதுச்சேரி முதலியார் பேட்டை தொகுதி அதிமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் இல்லம் அருகே நடைபெற்றது. 


விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அதிமுக மாநில அம்மா பேரவை செயலாளரும், தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பாஸ்கர் மற்றும் அவரது துணைவியார் கன்னிய செல்வி பாஸ்கர்,மகள் ஸ்ரீமதி ஆகியோர் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழாவை தொடங்கி வைத்து சிறப்பித்தனர். 


இதில் முதலியார்பேட்டை தொகுதியை சார்ந்த 500கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர். விழாவில் பங்கேற்ற அனைத்து பெண்களுக்கும் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.


இந்த நிகழ்ச்சியில் முதலியார் பேட்டை தொகுதி அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!