Breaking News

குடியரசு தினத்தை முன்னிட்டு முத்தியால்பேட்டை தொகுதியை சேர்ந்த 32 மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்களை திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தா. சரவணன் வழங்கினார்.

 


முத்தியால்பேட்டை தொகுதி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தா. சரவணன் தனது சொந்த நிதியில் தொகுதி முழுவதும் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

 இதன் ஒரு பகுதியாக குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று அவரது அலுவலகத்தில் முத்தியால்பேட்டை தொகுதியை சோலை நகர் தெற்கு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 32 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

 இதில் கலந்துகொண்ட திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தா. சரவணன் சோலை நகர் தெற்கு பகுதியைச் சேர்ந்த 32 மீனவ பயனாளிகளுக்கு மீன்பிடி வலைகள் உள்ளிட்ட சாதனங்களை சொந்த செலவில் இலவசமாக வழங்கினார்.

இந்த நிகழ்வில் தொகுதி அவைத்தலைவர் சௌரிராஜன், மாநில மீனவர் அணி துணை செயலாளர் எழிலன், முன்னாள் தொகுதி மீனவர் அணி துணை செயலாளர் தங்கராசு மற்றும் பூபதி ,சந்துரு, தேசப்பன், உதயகுமார், விநாயகமூர்த்தி உட்பட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

No comments

Copying is disabled on this page!