Breaking News

பகுதி நேர வேலை, கிப்ட் பார்சல் அனுப்பியதாக கூறி புதுவையில் 5 பேரிடம் ரூ.13.90 லட்சம் மோசடி..

 


புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் செந்தில்வேலன். இவருக்கு டெலிகிராம் மூலம் ஒருவர் தொடர்பு கொண்டு ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை உள்ளதாக கூறியுள்ளார்.இதனை நம்பி செந்தில்வேலன் டாஸ்க் விளையாட்டு விளையாடியுள்ளார். பிறகு நாளடைவில் பணம் செலுத்த வேண்டும் என கூறியதால் அவர் கொஞ்சம் கொஞ்சமாக ரூ.1 லட்சத்து 31 ஆயிரம் பணம் செலுத்தி ஏமாந்தார்.


இதேபோல் கதிர்காமம் பகுதியை சேர்ந்த புவனேஷ் என்பவரிடம் ரூ.80 ஆயிரம், மோசடி செய்துள்ளனர். காரைக்காலை சேர்ந்த பஷீர் அகமது என்பவருக்கு வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு கடன் தருவதாக கூறி ரூ.78 ஆயிரத்து 500 ஆன்லைன் மூலம் மோசடி செய்தனர். மேலும், காரைக்கால் சிவக்குமார் என்பவரின் மகள் மகாலஷ்மிக்கு அவரது நண்பர்கள் மூலம் லண்டனில் இருந்து கிப்ட் பார்சல் அனுப்பியுள்ளதாக இணையவழி மோசடிக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இதனை நம்பி மகாலஷ்மி ரூ.11 லட்சத்தை ஆன்லைன் மூலம் அவர்களுக்கு செலுத்தி ஏமாந்தார்.


 புதுச்சேரி பிருந்தாவனம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தசேகர். இவர் தவறாக ஆன்லைன் மூலம் ரூ.60 ஆயிரம் பணத்தை மர்மநபர் ஒருவருக்கு அனுப்பியுள்ளார். பிறகு இந்த பணத்தை திருப்பி கேட்டபோது அவர் கொடுக்காததால் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதுசம்பந்தமாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Copying is disabled on this page!