22 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி விவசாயிகள் கோரிக்கை பேரணி;- 300க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாபெரும் கோரிக்கை பேரணி நடைபெற்றது. சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமையில் நடைபெற்ற இந்த பேரணி தருமபுரம் பகுதியில் இருந்து புறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த 300க்கு மேற்பட்ட விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகத்திற்கு பேரணியாக சென்று அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில், நெல் கொள்முதல் விலையை குவின்டாலுக்கு ரூபாய் 3000 ஆக உயர்த்திட வேண்டும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை இயக்க வேண்டும், காத்திருப்பு பட்டியலில் உள்ள வேளாண் மின் இணைப்புகளை உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 22 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
No comments