ஒரே நாளில் விவசாயிகள் வயிற்றில் அடித்த மழை, ஐயோ போச்சே என செய்வதறியாது தவிக்கும் விவசாயிகள்..
மயிலாடுதுறை, தரங்கம்பாடி தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகளில் 30 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி தண்ணீரில் மூழ்கி நாசம் அறுவடைக்கு தயாரான பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் கதறல் நிலக்கடலை விவசாயமும் தண்ணீரில் மூழ்கி பாதிப்பு.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காவிரி நீர் உரிய நேரத்தில் வந்து சேராததால் மழையை நம்பி பெரும்பாலான விவசாயிகள் காலம் கடந்து சம்பா சாகுபடி செய்திருந்தனர். இந்த ஆண்டு பருவ மழையில் தப்பிய பயிர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகையான் தாக்குதலால் பாதிக்கப்பட்டது. இதனால் கூடுதல் செலவு செய்து மருந்துகள் அடித்து பயிர்களை விவசாயிகள் காப்பாற்றினர். இந்நிலையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பெய்த கனமழை காரணமாக மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார் கோவில், திருக்கடையூர், நட்சத்திர மாலை, அனந்தமங்கலம், காழியப்பனலூர், என் என் சாவடி உட்பட சுற்று வட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயாரான சுமார் 30,000 ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சாய்ந்து நாசம். மயிலாடுதுறையில் 11.5 சென்டிமீட்டர் மழையும், தரங்கம்பாடியில் 12 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ள நிலையில் மேலும் மழை நீடிக்கும் என்பதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் திருக்கடையூர் ராமமூர்த்தி கூறும் போது: வடிகால்கள் முறையாக தூர்வாரப்படாததால் தண்ணீர் வடிவதில் காலதாமதம் ஏற்படும் எனவும் பயிர்கள் முளைக்கத் தொடங்கினால் முழுவதும் அழிந்து பயிர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தார். மேலும் தண்ணீர் வடிந்தாலும் அறுவடை செய்ய கூடுதல் தொகை செலவாகும் நிலையில் உரிய மகசூல் கிடைக்காது என்பதால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து முழு காப்பீடு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோன்று நிலக்கடலை சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளதாக என் என் சாவடி விவசாயி பழனியப்பன் கூறும் போது. தரங்கம்பாடி தாலுகாவில் காழியப்பநல்லூர் என் என் சாவடி அனந்தமங்கலம் தில்லையாடி திருக்கடையூர் சிங்காநோடை உட்பட பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலை சாகுபடியும் ஒரே நாள் மழையில் மூழ்கி அழியும் அபாயத்தில் உள்ளது நிலக்கடலை சாகுபடி தண்ணீரில் மூழ்கியுள்ளதால் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நிலக்கடலை விவசாய பாதிப்பையும் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.
No comments