ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஈரோடு மாவட்ட முஸ்லிம் அசோசியேசன் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளரை ஆதரிக்க முடிவு..
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஈரோடு மாவட்ட முஸ்லிம் அசோசியேசன் திமுக வேட்பாளர் சந்திரகுமார் அவர்களை ஆதரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக முஸ்லிம்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை தொடர்ந்து நிறைவேற்றி வரும் மு.க.ஸ்டாலினின் தமிழக அரசு ஈரோடு மாவட்ட முஸ்லிம்களின் கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்ளும் என்ற முழு நம்பிக்கையுடனும் அனைத்து கோரிக்கைகளையும் கனிவுடன் பரிசீலித்து தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்களிடம் கோரிக்கைகளை சமர்ப்பித்தனர்
கோரிக்கைகள்:
1. முத்தமிழறிஞர் கலைஞரின் தோழர் திமுக வின் இசை முரசு நாகூர் அனிபா- வின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு விழாவாக நடத்த கோரியும்!
2. ஈரோட்டில் காயிதே மில்லத் பெயரில் பி.பெ.அக்ரஹாரத்தில் அமைந்துள்ள நகருக்கு மாநகராட்சி அங்கீகாரம் வழங்கவும் கேட்டுக்கொள்கிறோம்.
3. பெரியார், அண்ணா, காமராஜ் போன்ற தலைவர்கள் பெயரால் விருதுகள் வழங்கும் தமிழக அரசு கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் பெயரில் விருது வழங்க ஆவண செய்ய வேண்டுகிறோம்.
4. உள்ளாட்சி தேர்தல்களில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் வார்டு வரையறையின் போது சிதைக்கப்படாமலும் மேலும் முஸ்லிம் வேட்பாளர் போட்டியிட வாய்ப்புள்ள வார்டுகள் பெண்கள் வார்டாக மாற்றாமல் இருக்கவும் வழிவகை செய்ய சு.முத்துசாமி அவர்களை கேட்டுக் கொள்கிறோம். ( உதாரணம். ஈரோடு மாநகராட்சி 7,14, 31,32 வார்டுகள்.
No comments