பாஜக மாநில செயலாளர் சரவணன் ஏற்பாட்டில் பிச்சைவீரன்பேட் கிராமத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா..
புதுச்சேரி உழவர்கரை தொகுதிக்குட்பட்ட பிச்சவீரன்பேட் கிராமத்தில் புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் சரவணன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அப்பகுதியைச் சார்ந்த மகளிர் மட்டும் துப்புரவு பணியாளர்கள் பொங்கல் வைப்பதற்கான நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் பாரம்பரிய மிக்க கலையான கும்மியடித்தல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து
பிச்சவீரன்பேட் பகுதியை சார்ந்த மகளிர் சார்பாக டாக்டர் அம்பேத்கர் பெண்கள் விடுதலை இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இயக்கத்தின் பெயர் பலகையை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்து பெண்களின் முன்னேற்றத்திற்கு புதுச்சேரி அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என கூறி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் பாஜக மாநில தொகுதி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments