Breaking News

புதுச்சேரியில் கட்டாயம் ஹெல்மெட் உத்தரவு காரணமாக, சாலையோரங்களில் ஹெல்மெட் விற்பனை அதிகரித்து உள்ளது.

 


புதுச்சேரியில் வரும் 12ம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹெல்மெட் அணிய தவறினால், ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, போக்குவரத்து போலீசார் பள்ளி, கல்லுாரிகளில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற அறிவிப்பு காரணமாக, புதுச்சேரியில் ஹெல்மெட் விற்பனை சூடு பிடிக்க துவங்கியுள்ளது.

இதனால், புதுச்சேரியின் முக்கிய சாலையோரங்களில் ஹெல்மெட் விற்பனை அதிகரித்துள்ளது.அங்கு, ரூ. 500 முதல் 1000 வரையிலான பல்வேறு விதங்களில் பல வசதிகளுடன் கூடிய ஹெல்மெட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

No comments

Copying is disabled on this page!