பொதுமக்களிடம் அவதூறு பரப்பும் வகையில் உளர வேண்டாம். இல்லையேல் அதற்கான விலையைக் கொடுக்க நேரிடும். சம்பத், எம்.எல்.ஏ எச்சரிக்கை..
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் - பாரதிய ஜனதாவுக்குமான முரண்பாடு வெறும் அரசியல் முரண்பாடு மட்டுமல்ல. இது ஒரு சித்தாந்த போர். ஒரு சிறுபான்மைக் கூட்டம் பெரும்பான்மை உழைக்கும் மக்களை அடிமைப்படுத்தி அதிகாரம் செலுத்துகின்ற ஆரிய சித்தாந்தத்திற்கும், எல்லோருக்கும் எல்லாம் என்ற சமத்துவத்தை முன்வைத்து சமூக நீதிப் பேசும் திராவிட சித்தாந்தத்திற்கும் இடையிலான போர். தந்தை பெரியார் காலம்தொட்டு, கலைஞரால் வழி நடத்தப்பட்டு இன்று திராவிட மாடல் ஆட்சி நாயகன் தளபதி அவர்களால் இந்த போர் வழி நடத்தப்படுகிறது.
தலைவர் கலைஞருக்கு பின் நீர்த்துப்போகும் என்று மனப்பால் குடித்தவர்கள் எண்ணம் முறியடிக்கப்பட்டுள்ளது. அதன் பிரதிபலன் தான் மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து மாநில நலனுக்காக எந்த முதல்வரும் குரல் கொடுக்காத நிலையில் தமிழக முதல்வர் குரல் கொடுத்து வருகிறார்.
அந்த வழியில் தான் புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகம் பாஜகவின் மக்கள் விரோத சட்டங்களான புதிய கல்விக் கொள்கை, சமஸ்கிருத திணிப்பு, நீட் தேர்வு திணிப்பு போன்றவைகளை மிகத் தீவிரமாக எதிர்த்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அது மட்டுமின்றி இன்றைய என் ஆர் காங்கிரஸ் - பாஜக மக்கள் விரோத அரசின் செயலற்ற தன்மையை கண்டித்து, மாநில மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருவதுடன் சட்டப்பேரவைத் தலைவர் தனது அதிகார வரம்பை மீறிய விதத்தில் செயல்படுவதும், தன்னை ஒரு மாநில முதல்வர் போல் காட்டிக்கொண்டு போட்டி அரசு நடத்துவதையும் சுட்டிக்காட்டி கண்டித்து வந்துள்ளோம்.
இப்படிப்பட்ட சூழலில் பாஜகவின் எம்எல்ஏ ஜான்குமார் திமுக-வின் ஆதரவு இருப்பதால்தான் புதுச்சேரி பாஜக அரசுக்கும், பேரவைத் தலைவர் பதவிக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்று சிறு பிள்ளைத்தனமாகவும், அரசியல் அரை வேக்காட்டுத்தனமாகவும் பதில் கூறியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். உங்கள் அரசியல் அரிப்புக்கு திமுக அடிபணியாது. சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து வியாபார நோக்கில் செயல்படும் உங்களுக்கு திமுக ஆதரவாக இருக்கும் என்று நினைப்பது கோமாளித்தனம்.
புதுச்சேரி அரசியலில் பல காலங்களில் கட்சி மாறி கேலிக் கூத்தாக்கியவர்கள் அரசியலில் இல்லாமல் போனது புதுச்சேரி மக்கள் அறிந்தது. அந்த நிலை தான் ஜான் குமாருக்கும் ஏற்படும்.
தி.மு.கழகம் தான் அவருக்கு அரசியல் அறிமுகம் கொடுத்தது. திரு. ஜானகிராமன் அவர்களால் நகர மன்ற தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு, புதுச்சேரி நகராட்சி துணைத்தலைவராக அமர்த்தி அழகு பார்த்தது. பின்னர் அவராலேயே உழவர்கரை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டவர். பின்பு ஜானகிராமன் அப்பாவை மறந்து திரு. நாராயணசாமியை அப்பாவாக்கி நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். பின்பு திரு. வைத்திலிங்கத்துடன் இணைந்து காமராஜர் நகர் தொகுதியில் நின்று, இறுதியில் அந்த ஆட்சியை கலைத்து பாஜகவில் இணைந்தார்.
இப்படி பலமுறை அணி மாறியவர். தொகுதி மாறியவர். எவருக்கும் விசுவாசம் உள்ளவராகவோ, எந்த தொகுதிக்கும் நன்மை செய்தவராகவோ விளங்கியவர் அல்ல ஜான்குமார். வரும் தேர்தலில் முதலியார்பேட்டை தொகுதிக்கு போகப்போவதாக லாட்டரி சீட்டு அதிபர்கள் கூட்டணி போட்டுள்ளார். 10 ஆண்டுகாலம் மக்கள் பிரதிநிதியாக இருந்து எந்தத் தொகுதியிலாவது ஏதாவது சாதனை செய்துள்ளேன் என்று அவரால் சொல்ல முடியுமா?. அவர் செய்த ஒரே சாதனை தொகுதி வாக்காளர்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை கொடுத்து அனைவரையும் கவர் படுத்தினாரே தவிர, வேறு எதையும் சாதிக்கவில்லை. ஒரு கட்சியில் இருந்து கொண்டு அந்த கட்சிக்கு துரோகம் நினைக்கும் சுயேட்சையுடன் கூட்டு சேர்ந்து தன் சொந்த கட்சிக்கு வேட்டு வைக்கும் ஜான் குமார் முதலில் அரசியல் என்பது என்ன என்பதை தெரிந்து கொண்டு பேச வேண்டும். முதலில் அவரது அரசியல் என்னவென்று பொதுவெளியில் அவர் விளக்க வேண்டும். அதன் பிறகு அவர் கருத்து கூறட்டும். சாதாரண பள்ளி மாணவன் கூட தெளிவாக அரசியல் தெரிந்துள்ள இன்றைய காலகட்டத்தில் எந்த அரசியல் தெளிவுமின்றி பைத்தியக்காரன் போல் அவ்வப்போது உளறுவது தான் இவரது வாடிக்கையாக
உள்ளது. அவர் சேர்ந்து உள்ளதாக கூறப்படும் பாஜக வேண்டுமானால் சொரணை இல்லாமல் இருக்கலாம். தனது கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ சுயேட்சையுடன் கூட்டு சேர்ந்து லாட்டரி முதலாளியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த போது அவர்கள் மீது அக்கட்சி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதற்கு யோகியதையற்ற கட்சி தான் பாஜக. அதனால்தான் இன்று இப்படி உளறுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. ஆகவே, ஜான் குமார் இது போன்ற அரைவேக்காடு பேச்சை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். பாஜகவும் திமுகவுக்கும் எவ்வித உறவும் இல்லாமல் உள்ள நிலையில் பொதுமக்களிடம் அவதூறு பரப்பும் வகையில் இதுபோன்று உளர வேண்டாம் என்று எச்சரிக்கிறோம். இல்லையேல் அதற்கான விலையைக் கொடுக்க நேரிடும்.
No comments