2024-2025 சம்பா பருவத்திற்கான நெல் கொள்முதல் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தொடங்கி வைத்தார்..
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, இந்த ஆண்டு பருவம் 2024-2025- ஆம் ஆண்டிற்கு, 175 நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கியுள்ளோம். இன்றைய தேதியில் 68 திறந்து உள்ளோம். தற்போது, நெல் வரத்து தகுந்தாற்போல், மீதமுள்ளதை படிப்படியாக திறக்கப்படும். மயிலாடுதுறையில் 68,880 ஹெக்டேர் பயிர் சாகுபடி செய்துள்ளோம். 3,44,400 மெ.டன் நெல் உற்பத்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகம் மூலம் 2,50,000 மெ.டன் தற்போது கொள்முதல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சன்னரக நெல் குவிண்டால்1-க்கு 2320 ஊக்கத்தொகை 130 மொத்தம் 2450-க்கும், பொதுரக நெல் குவிண்டால்1-க்கு ரூ.2300-ம், ஊக்கத்தொகையாக ரூ.105-ம், ஆக மொத்தம் ரூ.2405 வழங்கப்படும். சன்னரக நெல் ஒரு மூட்டைக்கு (40 கிலோ) ரூ.980-க்கும், பொதுரகம் ஒரு மூட்டைக்கு (40 கிலோ) ரூ.962-க்கும், விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
விவசாயிகள் விற்பனை செய்ய பயிரிட்டதற்கான ஆதாரங்களான பட்டா, சிட்டா, அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களிடம் பெற்றுக் கொள்ளலாம் அதில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால் மாவட்ட நிர்வாகத்தினரை அணுகலாம். குறைகளை களைய 24 மணிநேரமும் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், கட்டுப்பாட்டு அறை தொடர்பு கொள்ளலாம். அதேபோல், 04364-211054 என்ற தொiபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம், மேலும், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அவர்களின் 8760947606-கைப்பேசி எண்ணிற்கும் புகார்கள் தெரிவிக்கலாம். மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர்களிடமும் நேரிடையாக புகார்களை தெரிவிக்கலாம். இந்த ஆண்டு விவசாயிகளிடமிருந்து எளிமையாக நெல்லை கொள்முதல் செய்து அவர்களுக்கு எந்த சிரமுமின்றி வழங்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்கள். ஆகவே, விவசாயிகள் இதனை பயன்படுத்தி பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் மோகன், தரங்கம்பாடி வட்டாட்சியர் மகேஷ்; மற்றும் விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments