ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில் குவிந்து வரும் பக்தர்கள்..
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உலக புகழ்பெற்ற அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது இக்கோவிலில் சுவாமி கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி பக்தர் மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்ததால் அட்ட விரட்ட தளங்களில் ஒன்றாக திகழ்கிறது, இவ்வாலயத்தில்60,70,80,90,100 வயது உள்ளவர்கள் ஹோமம் செய்து வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம், வருடம் 365 நாட்களும் திருமணம் நடைபெறும் ஒரே தலமாகும் மேலும் பல்வேறு சிறப்புகளை உடைய இக்கோவிலில் இன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர் மேலும் தர்மபுரம் ஆதீனம் 27 ஆவது குருமஹா சன்னிதானம் கோயிலுக்கு வந்திருந்து, விநாயகர்,அமிர்தகடேஸ்வரர், காலசம்ஹார மூர்த்தி,அபிராமி உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று வழிபட்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
No comments