அரியாங்குப்பம் பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் விஜயலட்சுமி ஜெயமூர்த்தி கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்.
அரியாங்குப்பம் பகுதியில் ஒன்பதாம் ஆண்டு பொங்கல் கலை விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் கடந்த இரு தினங்களாக நடைபெற்றது இதில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் விஜயலட்சுமி ஜெயமூர்த்தி முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார் முன்னதாக இவ்விழாவில் தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் விவசாயத்தை பெருக்க வயலில் விளைந்த புது நெல்மணிகள் தென்னம்பாளை கொடுத்து சிறப்பு விருந்தினர்களை வரவேற்றனர் தொடர்ந்து உறி அடித்தல் கயிறு இழுத்தல் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயமூர்த்தி ஆதரவாளர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
No comments