Breaking News

மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சியை முதலமைச்சர் ரங்கசாமி துவக்கி வைத்து, மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு பாராட்டினார்.

 


புதுச்சேரி அரசு பள்ளி கல்வி இயக்கம் சார்பில் மண்டல அளலான அறிவியல் கண்காட்சி ஏம்பலத்தில் உள்ள பி.எம்.ஸ்ரீ மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று துவங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு அறிவில் கண்காட்சியை தொடங்கி வைத்து மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு பாராட்டினார். 


இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் செல்வம், கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிகாந்தன் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

இந்த அறிவில் கண்காட்சியில் அரசு பள்ளிகள் சார்பில் 230 படைப்புகளும், தனியார் பள்ளிகள் சார்பில் 153 படைப்புகளும் என மொத்தம் 383 அறிவிப்பு படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கவும், அவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வரும் வகையில் இது போன்ற கண்காட்சிகள் நடத்தப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Copying is disabled on this page!