Breaking News

பாண்டிச்சேரி சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் 5 நாட்கள் நடைபெறும் கட்டுமான பொருட்கள் கண்காட்சியை முதலமைச்சர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.

 


பாண்டிச்சேரி சிவில் இன்ஜினியர் அசோசியேசன் சார்பில் 5 நாட்கள் நடைபெறும் கட்டுமான பொருட்கள் கண்காட்சியில் துவக்க விழா புதுச்சேரி -கடலூர் சாலையில் உள்ள அந்தோனியார் மஹாலில் இன்று நடைபெற்றது.


கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் குழுவின் தலைவர் அண்ணாமலை மற்றும் பாண்டிச்சேரி சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் தலைவர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சியை தொடங்கி வைத்தனர்‌.


இதில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்களின் மூலம் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 


ஐந்து நாட்கள் நடைபெறும் கட்டுமான பொருட்கள் கண்காட்சியில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு ஒருங்கிணைப்பு குழு அழைப்பு விடுத்துள்ளது.

No comments

Copying is disabled on this page!