ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் இலவச கல்வி திட்டம் மற்றும் ஸ்காலர்ஷிப் திட்டம் ரூ.40 கோடியே 71 லட்சம் வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், புதுச்சேரியில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த 7,195 மாணவ மாணவியர்களுக்கு 2024-25 ஆம் ஆண்டுக்கான உதவி தொகை மற்றும் ஸ்காலர்ஷிப் 40 கோடியே 71 லட்சத்து 98,756 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி சட்டப்பேரவையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
இந்த தொகை அந்தந்த அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சியின் போது, தகுதி வாய்ந்த அனைவருக்கும் அரசே கல்விக் கட்டணத்தைச் செலுத்துவதால், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் கல்விக் கட்டணத்தைச் செலுத்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ மாணவர்களை வலியுறுத்தக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.அப்போது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் இளங்கோவன் உடனிருந்தார்.
No comments