கால்நடை விவசாயிகளுக்கு கால்நடைகளுக்கான தீவனம் மற்றும் மருந்து பொருட்களை முதலமைச்சர் ரங்கசாமி பயனாளிகளுக்கு வழங்கினார்.
புதுச்சேரி கோமாதா கோசாலை மற்றும் புதுச்சேரி பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட கால்நடை விவசாயிகளுக்கு கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் கால்நடைகளுக்கான மாட்டு தீவனம் ,தாதுப்பு கலவை மற்றும் சத்து டானிக் ஆகியவை அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கால்நடைகளுக்கான சசத்து பவுடர் மற்றும் 20 கிலோ கால்நடை தீவனத்தை பயனாளிகளுக்கு அறக்கட்டளையின் சார்பில் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கால்நடைத்துறை இணை இயக்குனர் டாக்டர் குமாரவேல் மற்றும் புதுச்சேரி பிராணிக நலன் மற்றும் பாதுகாப்பு இயக்கம் கோமாதா கோசால அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் செல்வமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்
No comments