Breaking News

பொங்கல் தொகுப்புக்கு பதில் இந்தாண்டு ரேஷன்கார்டுக்கு 750 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என, முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு..

 


புதுச்சேரியில் பொங்கல் தொகுப்புக்கான ஆரம்பக்கட்ட பணிகள் ஏதும் நடக்கவில்லை.பொங்கல் பொருட்கள் வழங்க அரசு திட்டமிட்டாலும், அதற்கு அனுமதி பெற்று டெண்டர் கோரி பொருட்களை பெற்று விநியோகிக்க போதிய கால அவகாசம் இல்லை. எனவே இந்த ஆண்டும் பொங்கல் தொகுப்புக்கு பதிலாக பணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.


இது தொடர்பாக முதல்வர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறுகையில்,


 கடந்தாண்டை போலவே, இந்தாண்டும் ரேஷன் கார்டுக்கு ரூ. 750 பயனாளிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது' என்றார்.அதை தொடர்ந்து பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக 750 ரூபாய் கவர்னர், நிதி துறையின் ஒப்புதல் பெற்று அனைத்து ரேஷன் கார்டுகளிலும் வரவு வைக்கப்பதற்கான கோப்பு பணிகளில் குடிமை பொருள் வழங்கல் துறை இறங்கியுள்ளது.

No comments

Copying is disabled on this page!