உளுந்தூர்பேட்டை அருகே அதிவேகமாக வந்த இருசக்கர வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி கொண்ட விபத்தின் சிசிடிவி காட்சி.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மூலசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ரத்தினவேல் என்பவர் எம் எஸ் தக்கா பகுதியில் உள்ள மளிகை கடையில் பொருட்களை வாங்குவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது உளுந்தூர்பேட்டையில் இருந்து எம் எஸ் தக்கா நோக்கி மற்றொரு இருசக்கர வாகனத்தில் உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரம் பகுதியை சேர்ந்த ராம்குமார் மற்றும் சிறுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம் ஆகியோர் சென்று கொண்டிருந்தனர் இந்த இரண்டு இரு சக்கர வாகனங்களும் எம் எஸ் தக்கா ஜானு பேக்கரி அருகே சென்று கொண்டிருந்தபோது இரண்டு இரு சக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ரத்தினவேல் என்பவர் சம்பவ இடத்திலே கால் முறிவு ஏற்பட்ட நிலையில் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த நிலையில் இந்த இரண்டு இரு சக்கர வாகனங்களும் மோதி இருசக்கர வாகனங்கள் சாலையை தீர்த்திய படி சென்ற சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments