அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு மூன்று பிரிவுகளில் நடைபெற்ற இருபாலருக்கான மிதிவண்டி போட்டிகள்..
அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாணவர்கள் இருபாலருக்கான மிதிவண்டி போட்டி நடைபெற்றது. 13, 15, 17 வயதுக்கு உட்பட்டோர்கள் என இருபாலருக்கும் மூன்று பிரிவுகளில் தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது. 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஆறுபாதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இருந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை 5 கிலோ மீட்டர் தூரமும், 15 மற்றும் 17 வயது உட்பட்டவர்களுக்கு செம்பனார்கோவில் காவல் நிலையம் அருகில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஏழு கிலோ மீட்டர் தூரம் வரை போட்டிகள் நடைபெற்றது. இருபாலருக்கும் தனித்தனியாக நடத்தப்பட்ட போட்டிகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, எஸ்பி ஸ்டாலின் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் கொடியசைத்து துவங்கி வைத்தனர். போட்டியில் வெற்றி பெற்ற முதல் 10 நபர்களுக்கு ரொக்க பணம் சான்றிதழ்கள் பரிசாக வழங்கப்பட்டது.
No comments