புதுச்சேரியில் பி.எஸ்.என்.எல்., நிறுவனம் இன்டர்நெட் டி.வி சேவை சோதனை ஓட்டம்..
புதுச்சேரி பிஎஸ்என்எல் முதன்மை பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
புதுச்சேரியில் பி.எஸ்.என்.எல்., நிறுவனம் சார்பில், பி.ஐ.டி.வி., (BITV) என்ற சேவை சோதனை ஓட்டமாக தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., மொபைல் வாடிக்கையாளர்கள் எந்த ஒரு கூடுதல் கட்டணமும் செலுத்தாமல் 500 பிளஸ் தொலைக்காட்சி சேனல்கள், நிகழ்ச்சிகள், விளையாட்டு, திரைப்படங்கள் மற்றும் டாக்குமென்டரிகள் உள்ளிட்டவற்றை பல்வேறு மொழிகளிலும் பி.எஸ்.என்.எல்., மொபைல் இன்ட்ராநெட்டின் - பி.ஐ.டி.வி., வழியாக பார்க்க முடியும்.
இச்சேவையைப் பெற ஆன்ட்ராய்டு மொபைல் பயன்பாட்டாளர்கள் தங் களது மொபைல் போனில் கூகுள் ப்ளேஸ்டோர் சென்று ஓ.டி.டி.பிளே (OTT play) ஆப்பை நிறுவி பயன்படுத்த வேண்டும்.இந்த பி.ஐ.டி.வி.,ஐ பயன்படுத்தி இலவசமாக வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்களை பார்க்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments