Breaking News

பி.எம்.டி. மக்கள் பாதுகாப்பு இயக்க தென்மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..

 


தூத்துக்குடியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தென்மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தென்மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் பி.எம்.டி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பி.எம்.டி. தலைவர் இசக்கிராஜா தலைமை வகித்தார்.

இதில், தென்மாவட்டத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். தமிழர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு உரிய நீதி வழங்க வேண்டும். பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 46 சட்டமன்ற மற்றும் 7 நாடாளுமன்ற தனி தொகுதிகளை மறு வரையறை செய்ய வேண்டும். எஸ்.டி., எஸ்.சி., வன்கொடுமை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தேவர் சமுதாய அரசாணையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டவேண்டும்.


தூத்துக்குடி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வ.உ.சிதம்பரனார் பெயர் சூட்ட வேண்டும். தாமிரபரணி ஆறு பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் நல உதவிகளை நிறைவேற்ற வேண்டும். பட்டாசு ஆலை தொழிலாளர்களின் நலன் காக்கப்பட வேண்டும். தொல்லியல் வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

பின்னர், தூத்துக்குடி- பாளை சாலையில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு, பி.எம்.டி. தலைவர் இசக்கிராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கூட்டத்தில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர். தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் குலசை கோபால் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.


செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.

No comments

Copying is disabled on this page!