Breaking News

மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி..

 


பகல் நேரங்களில் வீட்டில் உள்ள ஜன்னல் கதவுகளை திறந்து வைத்து சூரிய ஒளியை பெற்று இயற்கை காற்றை சுவாசிப்பதன் மூலம் மின்விளக்குகள் மற்றும் மின்விசிறிகளை பயன்படுத்துவதை தவிர்ப்பதன் மூலம் மின்சாரத்தை சிக்கனப்படுத்தலாம் என கலந்து கொண்ட மின்வாரிய அதிகாரி ஆலோசனை.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பில் மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மின்வாரிய செயற்பொறியாளர் சர்தார் தலைமையில் நடைபெற்ற பேரணியை உளுந்தூர்பேட்டை நகராட்சி ஆணையர் இளவரசன், காவல் ஆய்வாளர் வீரமணி ஆகியோர் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர். பேரணியில் உளுந்தூர்பேட்டை கோட்டத்திற்கு உட்பட்ட மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அரசு தொழிற்பயிற்சி மாணவர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் ஏந்திய பதாகைகளை ஏந்தியும் முழக்கங்களை எழுப்பியும் பேரணியாகச் சென்றனர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி கடைவீதி, பேருந்து நிலையம், காமராஜர் சிலை, உழவர் சந்தை, சென்னை சாலை வழியாக வந்து மணிக்கூண்டு திடலை அடைந்தது. பேரணியில் கலந்து கொண்ட உளுந்தூர்பேட்டை மின்வாரிய உதவி செயல் பொறியாளர் அய்யம்பெருமாள் வீடுகளில் சுழல் விளக்கு பயன்படுத்துவதால் அதிக மின்சாரம் பயன்படுவதாகவும் அதனை கட்டுப்படுத்த எல் இ.டி விளக்குகளை பயன்படுத்த வேண்டும் எனவும் அதன் மூலம் மின்சாரத்தை சேமிக்கலாம் எனவும் பகல் நேரங்களில் வீட்டில் உள்ள ஜன்னல் கதவுகளை திறந்து வைத்தால் சூரிய ஒளி வீட்டுக்குள் வந்து இயற்கையான காற்றை சுவாசிப்பதன் மூலம் பகல் நேரத்தில் மின்விளக்குகள் மற்றும் மின்விசிறிகளை பயன்படுத்துவதை தவிர்ப்பதன் மூலம் மின்சாரத்தை சிக்கனப்படுத்தலாம் என்று மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பேசினார்.

No comments

Copying is disabled on this page!