வில்லியனூர் திருக்காமேஸ்வரர் ஆலயத்தில் நாட்டிய சாஸ்திராலயா இசை மற்றும் நடன பள்ளி ஏற்பாட்டில் ஆருத்ரா நாட்டியாஞ்சலி நடன நிகழ்ச்சி..
வில்லியனூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கோகிலாம்பிகை உடனுறை ஶ்ரீ திருக்காமேஸ்வரர் ஆலய வளாகத்தில் வில்லியனூர் நாட்டிய சாஸ்திராலயா இசை மற்றும் நடனப்பள்ளி ஏற்பாட்டில் ஆருத்ரா நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வில்லியனூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சிவா கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி நடன நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில் நாட்டிய சாஸ்திராலயா இசை மற்றும் நடனப் பள்ளியின் நிறுவனர்கள் உமா ரமேஷ் ,
மாதவி ஜெய்பிரகாஷ், ஆகியோர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பள்ளியில் பயின்ற மாணவிகள் மிகச் சிறப்பாக நடனக்கலையை வெளிப்படுத்தினர். மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பம்சமாக பரதநாட்டியம், மோகினி ஆட்டம், போன்ற நடன நிகழ்வுகளை மாணவர்கள் மேடையில் அரங்கேற்றினர். மேலும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நடனப் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் செய்திருந்தனர்.
No comments