Breaking News

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனம்..

 


மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. அப்பர், சம்பந்தர், சுந்தர ஆகிய மூவராலும் தேவார பாடல் பெற்ற தலங்களில் இக்கோவிலும் ஒன்று. இங்கு அமிர்தமே லிங்கமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அட்டவீரட்ட தளங்களில் ஒன்றான இக்கோவில் காலசம்கார மூர்த்தி உற்சவராக அருள் பாலித்து வருவது சிறப்பம்சமாகும். இந்த கோவிலில் மட்டுமே ஆயுள் விருத்திக்காக ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபாடு செய்து வருகிறார்கள். மணி விழா . சதாபிஷேகம், மற்றும் ஆயில் ஹோமம் உள்ளிட்டவற்றை இங்கு நடத்துவது ஐஸ்வர்யங்களை தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் மார்கழி மாதத்தை யொட்டி சிவபெருமானுக்குரிய முக்கிய விரத நாட்களில் ஒன்று திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது நடராஜர் சாமிக்கு சிறப்பு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். மேலும் பொங்கலை யொட்டி வெளி மாநில மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

No comments

Copying is disabled on this page!