Breaking News

அர்ஜுனா அறக்கட்டளை சார்பாக மனநல க் காப்பகத்தில் தேவையான பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.


ராசிபுரம் பகுதியில் அமைந்துள்ள அனைத்தும் கரங்கள் மனநல காப்பகம் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் உள்ளனர் இவர்கள் அர்ஜுனா அறக்கட்டளை நிறுவனர் பாஸ்கரன் மற்றும் அருணாச்சலம் மேலும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து இந்த மனநிலை காப்பகத்திற்கு தேவையான தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் பாய் போர்வைகள் மிக்ஸி அரிசி என்று ஒரு லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட நல உதவிகளை இலவசமாக வழங்கினர்.


மேலும் இந்த அர்ஜுனா அறக்கட்டளை கடந்த மூன்று வருடங்களாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஏழை எளிய மாணவ மாணவியர்கள் மற்றும் நலிந்த பிரிவினர்களுக்கு தேவையான உதவிகளை கரம் கொடுத்து உதவி வருகிறது இந்த அறக்கட்டளை சார்பாக பொருள் உதவி வழங்கிய பாஸ்கரன் அவர்கள் அர்ஜுனா விருதாளர் மற்றும் உலக ஆணழகன் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் மிக நிர்வாகி அருணாச்சலம் என்பவர் அவரும் உலக ஆணழகன் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இவர்கள் கூறுகையில் மேலும் தமிழ்நாட்டில் எங்கு வழிவடைந்த பள்ளிகள் மற்றும் மக்கள் இருந்தாலும் எங்களது பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் எங்களுக்கு உதவி செய்த ஸ்பான்சர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் எங்கள் அறக்கட்டளை சார்பாக எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் உங்களால்தான் நாங்கள் மென்மேலும் பல உதவிகளை செய்ய செய்ய முடியும் என்று அர்ஜுன் அவர்கள் பாஸ்கரன் தெரிவித்தார்.

No comments

Copying is disabled on this page!