Breaking News

கடல் மாசுபாடு மற்றும் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பதின் அவசியத்தை உணர்த்தும் வகையில் நீருக்கடியில் திருமணம் செய்து விழிப்புணர்வு..!


சென்னை மற்றும் புதுச்சேரியில் டெம்பிள் அட்வென்சர் என்கிற ஆழ்கடல் பயிற்சி நிறுவனம் நடத்தி வருபவர் அரவிந்த் தருண்ஸ்ரீ. இவரது மாணவி தீபிகா ஆழ்கடல் பயிற்சியாளராகவும் உள்ளார். இந்நிலையில் சுத்தமான காற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பாரா க்ளேடிங் செய்து காதலை வெளிப்படுத்திய நிலையில் கடல் மாசுபாடு மற்றும் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பதின் அவசியத்தை உணர்த்தும் வகையில் நீருக்கடியில் திருமணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். 



தீபிகா மற்றும் ஜான் டி பிரிட்டோ ஆகியோர் ஆள் கடல் பயிற்சி வீரர்களான அரவிந்த் தமிழ்ச்செல்வன் தினகரன் ஆகியோருடன் இணைந்து புதுச்சேரி கடல் பகுதியில் 5 கிலோமீட்டர் தூரத்தில் 50 அடி ஆழத்தில் திருமண அலங்காரங்கள் செய்யப்பட்டு திருமண கோலத்தில் இருவரும் மோதிரம் மாற்றி கடல் பாதுகாப்பு மற்றும் கடல் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி திருமணம் செய்து கொண்டனர். 

இது குறித்து அவர்கள் கூறுகையில் காற்று மாசுபாடு மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் கடல் மாசுபாட்டை தடுக்கும் வகையில் ஆழ்கடல் பயிற்சியாளரான நாங்கள் இதனை செய்தது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.

No comments

Copying is disabled on this page!