Breaking News

கட்டாய ஹெல்மெட் சட்டம் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி கருத்து கேட்க வேண்டும்..! அதிமுக மாநில செயலாளர் அன்பழகன்..

 


கட்டாய ஹெல்மெட் சட்டம் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி கருத்து கேட்க வேண்டும்..! அதிமுக மாநில செயலாளர் அன்பழகன்..

புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தை செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன், 

புதுச்சேரியில் 4-வது முறையாக வட மாநில காவல்துறை அதிகாரிகளால் கட்டாய ஹெல்மெட் சட்டம் பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்றும், இது குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி கருத்து கேட்க வேண்டுமென என வலியுறுத்தினார்.

இதனால் பொதுமக்களுக்கும், கீழ்நிலை காவலர்களுக்கும் விரும்பத்தகாத செயல்கள் நடைபெறும் என்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைய வாய்ப்பு உள்ளதால் ஹெல்மெட் கட்டாய சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றார்.

மத்திய அரசின் உத்தரவையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் பின்பற்றுவதாக கூறும் காவல்துறை, நள்ளிரவு வரை நடைபெறும் ரெஸ்டோ பார்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும்,ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் நடைபெறும் பாலியல் தொழில்களை தடுக்காதது ஏன் உட்பட அடுக்கடுக்காக காவல்துறைக்கு எதிராக கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசின் உத்தரவை பின்பற்றும் புதுச்சேரி அரசு, உள்ளாட்சி தேர்தலை நடத்தாதது, பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்தாதது, வக்பு வாரியத்தை அமைக்காதது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அரசுக்கு எதிராக முன் வைத்தார். 

மேலும் புதுச்சேரியில் முஸ்லிம் மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் அரசு, உடனடியாக அவர்களுக்கென தனி இடுகாடு அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments

Copying is disabled on this page!