Breaking News

பொங்கல் கொண்டாட தூத்துக்குடியில் அனைத்து பூங்காக்களும் தயார்! மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்..

 


பொங்கல் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரில் உள்ள பூங்காக்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்படும் என மேற்கு மண்டலத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். துணை மேயர் ஜெனிட்டா. துணை ஆணையர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டலத்தலைவர் அன்னலட்சுமி வரவேற்றார்.

முகாமில், பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தவரையில் 5 ஆண்டு 3 ஆண்டு என இரண்டு விதமான முறையில் சாலைகள் அமைக்கப்படுகிறது. புதிதாக சில பகுதிகளுக்கு முறைப்படுத்தி தார்சாலை அமைக்கப்படும். கோக்கூர் நீர்வழித்தடங்களில் பொதுமக்கள் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் போடுவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு நீர்வழித்தடங்களில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை தூக்கிவீசுவதால், அவை மழை காலங்களில் அடைப்பு ஏற்படுத்தி மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் பூங்கா, ராஜாஜி பூங்கா, ரோச் பூங்கா, முத்துநகர் கடற்கரை உள்ளிட்ட அனைத்து பூங்காக்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் பகுதிகள் முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்டு மக்கள் வந்து செல்லும் வகையில் தயார் நிலையில் வைக்கப்படும். புதிதாக வீடு கட்டுவதற்கு அனுமதி பெறுபவர்கள் பாதாள சாக்கடை இணைப்புக்கும் சேர்த்து அதற்கான தொகை கட்ட வேண்டும். இந்த மனுக்கள் பெறும் முகாம்கள் மூலம் அனைவரும் பயனடைந்து வருகின்றனர். மாநகர மக்கள் இனிவரும் காலங்களில் பெரிய அளவில் மழை வெள்ள பாதிப்பை சந்திக்க நேரிடாது. அந்தளவிற்கு அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளுக்கு அபதாரம் தொடர்ந்து விதிக்கப்படுகிறது. விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் மாடுகளை சாலைகளில் திரியவிடும் உரிமையாளர்கள் மீது உரிய நடடிவக்கை எடுக்கப்படும் என்றார்.

கூட்டத்தில் உதவி ஆணையர் பாலமுருகன், நகர அமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், துணைப்பொறியாளர்கள் காந்திமதி, இர்வின் ஜெபராஜ், துணைப் பொறியாளர் சரவணன், இளநிலை பொறியாளர் சேகர், சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன், கவுன்சிலர்கள் சந்திரபோஸ், கனகராஜ், விஜயலட்சுமி, கந்தசாமி, சரவணக்குமார், ராமர், பகுதி செயலாளர் ரவிந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகர வர்த்தக அணி அமைப்பாளர் ஆனந்தசேகர், இளைஞர் அணி துணை அமைப்பாளர் செல்வின், மகளிர் அணி துணை அமைப்பாளர் இந்திரா, சிவன்கோவில் அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, வட்டச்செயலாளர்கள் மந்திரகுமார், ரவிந்திரன், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், போல்பேட்டைபகுதி திமுக பிரதிநிதிகள் பிரபாகரன், ஜேஸ்பர் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 


செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.

No comments

Copying is disabled on this page!