நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஜெ.இராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் ஆய்வு..
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் இராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.பின்னர், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஜெ.இராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 9-ஆம்; தேதி அன்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதை தொடங்கி வைத்தார்கள். நேற்றைய தினம் பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.1.47 கோடி மதிப்பில் வழங்கி உள்ளோம். ரூ.2.2 கோடி மதிப்பில் பரிசு தொகுப்பு வழங்க இருந்தது. இதுவரை 67மூ கொடுக்கப்பட்டுள்ளது.. நாளைய தினமும் நியாய விலை கடைகள் இயங்கும். மீதமுள்ள அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் இந்த ஆண்டு நன்றாக விளைச்சல் இருக்கும் என்று கூறியுள்ளனர். விவசாயிகள் அதிகமாக நெல்லை கொள்முதல் செய்ய கொள்முதல் நிலையங்களை அமைக்க வலியுறுத்தி வருகின்றனர். விவசாயிகளின் தேவைக்கேற்ப நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார்கள். நேற்றைய தினம், 1808 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்;டுள்ளது. இன்றைய தினம் தஞ்சாவூரில் 37 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த ஆண்டு 5.52 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்துள்ளோம். செப்டம்பர் 9-தேதியிலிருந்து ரூ.1321 கோடி விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா செய்துள்ளோம். ஆகஸ்ட் மாதத்திற்குள் 30 லிருந்து 35 லட்சம் மெட்ரிக் டன் எதிர்பார்ப்பாக உள்ளது. விவசாயிகளை எக்காரணம் முன்னிட்டும் திருப்பி அனுப்பாமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டும். அதற்கு அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஜெ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்கள்.
இவ்வாய்வின்போது, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் (பொ) மோகன்;, மாவட்ட வழங்கல் அலுவலர் உ.அர்ச்சனா ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments