சீர்காழியில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 108-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக-வினர் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஈசானிய தெரு பகுதியில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் தலைமையில் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் மாநில அம்மா பேரவை துணை செயலாளர் மார்கோனி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மா.சக்தி, சந்திரமோகன், ஒன்றிய செயலாளர்கள் ஏ.கே.சந்திரசேகரன், ரவிச்சந்திரன் உள்ளிட்டடோர் கலந்து கொண்டனர்.
இதுபோல் சட்டநாதபுரம் ரவுண்டானா அருகில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு மாவட்ட செயலாளர் எஸ். பவுன்ராஜ் மலர் தூவி மரியாதை செய்தார், பின்னர் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் மரக்கன்றுகள் வழங்கினார்.
No comments