பெண் ஐபிஎஸ் அதிகாரி உள்ளடக்கிய நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தல்.
புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன்,
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில்,பல்கலைக்கழக நிர்வாகத்தின் அலட்சியம், பொறுப்பற்ற தன்மை ஆகியவற்றாலும், காவல்துறையினரின் காலதாமதமான நடவடிக்கையாலும் இப்பிரச்சனை தவறான கண்ணோட்டத்துடன் அவரவர்களுக்கு மனம் போன போக்கில் செய்திகளாக வெளிவருகின்றன.இது நமது புதுச்சேரி மாநிலத்திற்கு இழுக்கை ஏற்படுத்தும் செயலாகும்.
உண்மையில் இந்த பிரச்சனையில் பல்கலைக்கழக மாணவி பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டாரா அல்லது சாதாரணமாக திடீரென ஏற்பட்ட பிரச்சனையால் தாக்கப்பட்டாரா? பல்கலைக்கழக மாணவி தற்போது பாதுகாப்பாக உள்ளாரா? வேற எந்த அரசியல்வாதிகள் மூலமாக அந்த மாணவிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா? மாணவி தாக்குதலுக்கு ஆளான பிறகு காவல்நிலையத்தில் புகார் அளிக்க பல்கலைக்கழக நிர்வாகம் துணை நிற்கவில்லையா? அல்லது மாணவி புகார் அளிக்காத வகையில் போலி அறிவுறைகள் அந்த மாணவிக்கு நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தினீர்களா? உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரி உள்ளடக்கிய ஒரு நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.
No comments