Breaking News

ஆளுநர் மாளிகை பஞ்சாயத்து மாளிகையாக மாறி உள்ளது என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.

 


புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன், 

புதுச்சேரியில் கடந்த 10ஆம் தேதி நடைப்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன.இதில் எது உண்மை என்றும், எது பொய் என்றும் தெரியவில்லை. இதனால், மக்கள் மத்தியில் அரசின் மீது நம்பகத்தன்மை ஏற்படுகிறது. 

புதிய மதுபானம் தொழிற்சாலைகள் வழங்குவது சம்பந்தமாக துணை நிலை ஆளுநர் அவர்கள் வாய்மூடி மௌனம் காப்பது ஏற்புடையதல்ல. கடந்த சில நாட்களாகவே துணை நிலை ஆளுநர் மாளிகை என்பது பஞ்சாயத்து செய்யும் மாளிகையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்படுமா? இல்லயா? என்பதை ஏன் தெரியப்படுத்தாமல் மௌனம் சாதிக்கிறார். இவ்விஷயத்தில் தேசிய கட்சியான பிஜேபியின் முடிவு என்ன என்பதை பிஜேபி மூலம் துணைநிலை ஆளுநராக உள்ள நம் துணை நிலை ஆளுநர் தெரியப்படுத்த வேண்டியது அவரின் கடமையாகும் என்றார்.

No comments

Copying is disabled on this page!