மூலக்குளம் பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபர்..
புதுச்சேரி மூலக்குளம் பத்மாவதி மருத்துவமனை அருகே பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், வாலிபர் ஒருவர் கத்தியுடன் சுற்றித்திரிவதாக ரெட்டியார் பாளையம் காவல் நிலையத்திற்கு புகார் வந்தது.
புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
விசாரணையில் அருமார்த்தபுரம்- வசந்தம் நகரை சேர்ந்த சுந்தரம்(எ) பிராசாந்த்(26) என்பதும், இவர் மீது கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.இதனையடுத்து பிரசாந்தை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
No comments