வனத்துறை அதிகாரிகளை கண்டித்து பொதுநல அமைப்பினர் சார்பில் பிணத்திற்கு மனு கொடுக்கும் நூதன போராட்டம்..
புதுச்சேரி சாலைகள் மற்றும் பொது இடங்களில் உள்ள மரங்களை வெட்டி அகற்றுவதற்கு வனத்துறை அனுமதி பெற வேண்டும். ஆனால் முக்கிய வீதிகளில் கட்டப்படும் வணிக நிறுவனங்களின் முன்பு உள்ள மரங்களை எந்தவித அனுமதியும் பெறாமல் வனத்துறை அதிகாரிகள் ஒத்துழைப்புடன் வெட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனிடையே புதுச்சேரி வள்ளலார் சாலையில் புதிதாக கட்டப்படும் ஹோட்டல் முன்பு உள்ள மரங்கள் வெட்டப்படுவதாக பொதுநல அமைப்பினர், வனத்துறைக்கு நேரில் சென்று புகார் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து சமூக ஆர்வலர் கோகுல் காந்தி தலைமையில் 50க்கும் மேற்பட்ட பொதுநல அமைப்பினர் வனத்துறை அலுவலகம் முன்பு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பிணம் போல் வேடமடைந்த ஒருவரை தரையில் படுக்க வைத்து, லஞ்சமாக பணம் கொடுத்து கோரிக்கை மனு அளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளையும், புதுச்சேரி அரசையும் கண்டித்து கண்டன தோஷங்களையும் எழுப்பினர். இந்த நூதன ஆர்ப்பாட்டத்தை அவ்வழியே சென்ற பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
No comments