Breaking News

திருபுவனை காவல் நிலையத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் காவல் கண்காணிப்பாளர் வம்சித ரெட்டி தலைமையில் நடைபெற்றது..

 


புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நலன் கருதி புதுச்சேரி காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதையடுத்து வாரம்தோறும் சனிக்கிழமையில் புதுச்சேரி காவல் நிலையங்களில் மக்கள் குறைக்கேட்பு கூட்டமானது நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில் திருபுவனை காவல் நிலையத்தில் மேற்கு காவல் கண்காணிப்பாளர் வம்சத்திர ரெட்டி தலைமையில் வில்லியனூர், மங்கலம், காட்டேரிக்குப்பம், கரிக்கலாம்பாக்கம், நெட்டப்பாக்கம், மடுகரை, திருக்கனூர், திருபுவனை, ஆகிய காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் முன்னிலையில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.

 பொதுமக்கள் நேரடியாக சென்று குறைகளை தெரிவித்தும் அதற்கு உடனடி தீர்வு காண்பதற்கும் இதையடுத்து பொதுமக்களின் பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்திடவும் பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் ரோந்து பணிகள் மற்றும் காவல்துறை சார்பில் சிசிடிவி கேமராக்களை பொறுத்திட வேண்டும் என கோரிக்கைகளை காவல்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

No comments

Copying is disabled on this page!