Breaking News

புதுச்சேரி தலைமை செயலகத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 


தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.வளர்ச்சி ஆணையர் மற்றும் நிதி செயலர் ஆசிஷ் மாதோவ்ராவ் மோரே,தேசிய வாக்காளர் தின உறுதி மொழியை வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

 இதனைத்தொடர்ந்து அரசுச் செயலர் முத்தம்மா, தமிழில் உறுதிமொழியை வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.அரசுச் செயலர்கள் மற்றும் தலைமைச் செயலக அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!