ஆரோவில்லில் நடந்த பொங்கல் விழாவில் உள்ளூர்வாசிகளுடன், வெளிநாட்டினர் ஏராளமானோர் உற்சாகமாய் பங்கேற்றனர்.
புதுச்சேரி அருகே உள்ள சர்வதேச நகரமான ஆரோவிலில் மோகன கலாசார மையத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில், வெளிநாட்டினர், பாரம்பரிய முறைப்படி சேலை அணிந்து கொண்டு பங்கேற்றனர். உள்ளூர் பெண்களுடன் இணைந்து கரும்பு, காய்கறிகள் விநாயகருக்கு படையலிடப்பட்டு, மண் பானையில் பொங்கலிட்டனர்.
சமைக்கப்பட்ட பொங்கல், பங்கேற்ற வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியையொட்டி உரியடித்தல், கயிறு இழுத்தல், கும்மி அடித்தல், நாட்டுபுற நடனம் போன்ற தமிழர் பண்பாட்டு அடையாளங்களை விளக்கி நிகழ்ச்சிகள் நடந்தன.
No comments