காட்பாடியில் புத்தகங்களுடன் புத்தாண்டினை வரவேற்ற புத்தகக் கண்காட்சி..
வேலூர் மாவட்டம் காட்பாடியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் காட்பாடி வாசகர் வட்டம் பாரதி புத்தகக் குழு மின் சிறகுகள் கலைக்குழு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு தமிழ்நாடு மின்சார வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு வேலூர் வட்டம் இணைந்து புத்தகங்களுடன் புத்தாண்டு என்ற தலைப்பில் புத்தகக் கண்காட்சியை நடத்தினர்
இந்தப் புத்தக கண்காட்சி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் கிளைத் தலைவர் எழுத்தோவியன் தலைமை தாங்கினார் செயற்குழு உறுப்பினர்கள் டி. நேதாஜி வரவேற்று பேசினார் மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்ய புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள்
அப்போது அவர் கூறியதாவது புத்தகங்களோடு புத்தாண்டினை வரவேற்போம் வாசிப்போம் நேசிப்போம் என்கின்ற உரத்த சிந்தனையோடு இந்தப் புத்தகக் கண்காட்சியானது நடைபெற்றது
புத்தகங்கள் படிப்பதன் மூலம் நாம் பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள முடியும் எனவே நாம் தினமும் புத்தகங்களை படிப்போம் காட்பாடியில் நடைபெறும் புத்தக கண்காட்சிகளுக்கு அனைவரும் வருகை தந்து தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிச் சென்று பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்
புத்தக விற்பனையை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் ஓய்வு பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர் செ. நா. ஜனார்த்தனன் தலைமையாசிரியை மா. சினேக லதா ஆகியோர் துவக்கி வைத்தனர்
இதில் காட்பாடி காந்திநகர் எல்ஐசி கிளை அலுவலகம் எதிரே இதற்கான கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது இந்த கண்காட்சி அரங்கில் 500க்கும் மேற்பட்ட தலைப்புகளால் 5000 புத்தகங்கள் கண்காட்சி படுத்தப்பட்டுள்ளது
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments