Breaking News

பூம்புகார் எம்.எஸ் சுவாமிநாதன் அனைவருக்கும் மீன் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் 15 ஆம் ஆண்டு விழா..

 


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பூம்புகாரில் மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்..சுவாமிநாதன் நிறுவிய அனைவருக்கும் மீன் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் கடந்த 2009 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.‌இதன் மூலம் கடலோர மீனவ மக்களின் வாழ்வாதாரம் காக்க பல்வேறு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக இந்நிறுவனம் உருவாக்கிய புதுமையான கைப்பேசி செயலி (மீனவ நண்பன் ) கால வானிலை‌ விவரங்கள், முன்னெச்சரிக்கைகள், மீன்பிடி பகுதிகள் பற்றிய வழிகாட்டல்கள் போன்ற அவசியமான தகவல்களை மீனவர்களுக்கு வழங்கி வருகிறது. 

மீனவ பெண்கள் மற்றும் சிறு-குறு மீனவர்களை மேம்படுத்துவதில் மையம் முக்கிய பங்கு வகிக்கிறது. தனது தனிநபர் திறமை வளர்ப்பு மற்றும் வாழ்வாதார திட்டங்கள் மூலம் மீன் மதிப்புக்கூட்டு பயிற்ச்சி மூலம் பல மீனவர் மற்றும் மீனவ பெண்களை தொழில் முனைவோராக மாற்றியுள்ளது.

இன்று நடைபெற்ற 15 ஆண்டு துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் Dr.சௌமியா சுவாமிநாதன் அவர்கள் காணொளி காட்சி மூலமாக பங்கேற்று உறையாற்றினார். 

அப்போது பேசிய அவர் கூறியதாவது:-

சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் அனைவருக்கும் மீன் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் கடந்த 15 ஆண்டுகளாக மக்களின் முன்னேற்றத்திற்காக செய்யும் பல்வேறு சேவைகளையும்,காலநிலை மாறிவரும் சூழலில் நம்மை நாம் எவ்வாறு பாதுகாத்து கொள்வது பற்றியும், இதற்காக அரசு பின்பற்ற வேண்டிய யுத்திகள் பற்றியும், மீனவ பெண்களுக்கான முன்னேற்றம் பற்றியும் தெளிவாக பேசினார். மேலும் காலநிலை மாற்றம் மற்றும் மீனவர் நலம் குறித்த பிரத்யேக ஆராய்ச்சியில் ஈடுபட போவதாக தெரிவித்தார்.

எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையின் மூலம் பயிற்சி பெற்று மீன்வளம் ஆராய்ச்சி மற்றும் மீன் மதிப்பு கூட்டு பிரிவில் பல்வேறு சாதனைகளைச் செய்த மீனவர்களுக்கு சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கப்பட்டது.

 மீனவ பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் விதமாக சூரிய சக்தியை பயன்படுத்தி தூய்மையான முறையில் கருவாடு தயாரிக்கும் பயிற்சி பெற்ற 30 மீனவ பெண்களுக்கு ரூபாய் 13 லட்சம் மதிப்பிலான சூரிய சக்தி மீன் உலர் கலன்கள் வழங்கப்பட்டது.

 நிகழ்ச்சியில் பூம்புகார்,வானகிரி,மடவா மேடு உட்பட 23. கடலோர கிராம மீனவர்கள்,மீனவ பெண்களும் ,உள்நாட்டு மீன் வளர்ப்பு விவசாயிகளும் கலந்து கொண்டனர் .

No comments

Copying is disabled on this page!