தல' பொங்கல் கொண்டாடும் புதுமாப்பிள்ளைக்கு மணப்பெண் வீட்டார் 470 உணவு வகைகளுடன் பிரமாண்ட விருந்து..
புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் பகுதியில் வணிகர் சங்க கௌரவத் தலைவராக இருப்பவர் சத்யபாஸ்கர் வெங்கடேஸ்வர். இவருடைய மகள் டாக்டர் ஹரிண்யாவுக்கு கடந்த கோடையில் விஜயவாடாவை சேர்ந்த சாகேத்திற்க்கு திருமணம் செய்து வைத்தார்.
இந்த தம்பதியினர் தல பொங்கல் கொண்டாடுவதற்காக மாமியார் வீட்டிற்கு வருகை தந்தனர்.இந்த புதுமண தம்பதியினருக்கு பெண் வீட்டார் சார்பில் இன்று மதியம் தடபுடலான உணவு வழங்கப்பட்டது. அந்த உணவில் இனிப்பு, காரம், வெஜிடேரியன், நான் வெஜ் உள்ளிட்ட 470 உணவு வகைகள் பரிமாறப்பட்டது.
கூட்டுக் குடும்பம் காட்டிய பாச மரியாதையை கண்டு மருமகன் ஆச்சரியப்பட்டார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
No comments