நெல்லையில் கிறிஸ்மஸ் விழா கோலாலமாக கொண்டாடப்பட்டது பாளையங்கோட்டை சவேரியார் பேராலயத்தில் நடந்த திருப்பள்ளியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
இயேசு கிறிஸ்து பிறப்பை வரவேற்கும் விதமாக உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது அதன்படி கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது மேலும் ஏசு கிறிஸ்து பிறப்பை விளக்கும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தது தொடர்ந்து பாளையங்கோட்டை மறை மாவட்ட முதன்மை குரு குழந்தை இராஜ் தலைமையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
இதேபோல் பாளையங்கோட்டை முருகன் குறிச்சியில் அமைந்துள்ள சிஎஸ்ஐ கதிட்ரல் தேவாலயம் பாளையங்கோட்டை அந்தோனியார் தேவாலயம் உள்ளிட்ட நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்திருக்கும் கிறிஸ்து ஆலயங்களில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். கிறிஸ்மஸ் விழாவையொட்டி நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் இரவு சிறப்பு பணி மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
No comments