Breaking News

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி பெயரில் போலியாக உலாவும், 'வாட்ஸாப் லிங்'கை தொட்டால், உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் பறிபோய் விடும்..

 


புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள எச்சரிக்கை பதிவில்,


புதுச்சேரியில் வாட்ஸாப் குழுக்களுக்கு எஸ்.பி.ஐ., வங்கி பெயரில், இணையதள லிங்க் பரவி வருகிறது.

அதில், 'உங்கள் வங்கி கணக்கில் 7,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. லிங்கை திறந்து பெற்றுக் கொள்ளுங்கள். எஸ்.பி.ஐ., பரிசு புள்ளிகளை பணமாக்கி கொள்ளுங்கள்.உங்கள் ஆதார் எண்ணை வங்கி எண்ணுடன் இணைத்துக் கொள்ளுங்கள்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

லிங்கை தொட்டு, அந்த பைலை திறந்ததும், வாட்ஸாப் குழுக்களின் ஐகான்கள் மற்றும் பெயர்கள், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என மாறி விடுகின்றன.அடுத்த சில நிமிடங்களில், நாம் எந்தெந்த வாட்ஸாப் குழுக்களில் இணைந்து உள்ளோமோ அந்த குழுக்களுக்கும் அந்த லிங்க் பரவுகிறது. அந்த குழுவில் இருக்கும் யாராவது அந்த பைலை திறந்தால், அடுத்து வேறு குழுக்களுக்கும் இதேபோல் பரவி விடுகிறது.மோசடியான இந்த எஸ்.பி.ஐ., பைலை திறக்க வேண்டாம் என்று புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

No comments

Copying is disabled on this page!