கர்நாடக மாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட ஏழு லட்சம் மதிப்புள்ள 625 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை பகுதியில் நெடுஞ்சாலைத்துறை போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டனர் அப்பொழுது கர்நாடகா மாநிலத்திலிருந்துவந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் அப்பொழுது சரக்கு வாகனத்தில் ஹான்ஸ் மற்றும் குட்கா பொருள் மூட்டை மூட்டையாக இருந்தது கண்டறியப்பட்டது தொடர்ந்து கடத்திவரப்பட்ட இருவரை பிடித்து விசாரணை செய்ததில் கர்நாடக மாநிலத்தில் இருந்து திருச்சிக்கு விற்பனைக்காக கொண்டு சென்றது தெரிய வந்தது
இதனை அடுத்து ஏழு லட்சம் மதிப்புள்ள 625 கிலோ ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்களையும் லாரியும் பறிமுதல் செய்த போலீசார் கடத்திய சிவகுமார் (40) சஞ்சய் குமார் (38)ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
No comments