கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இயேசு கிறிஸ்துவின் சிறப்பை சித்தரிக்கும் வகையில் குடில் அமைத்தல்..
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி, குட்சமா ரிட்டன் பப்ளிக் பள்ளி, குட் சமோ ரிட்டர்ன் நர்சரி பிரைமரி பள்ளி ஆகியவை இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஆண்டுதோறும் கிறிஸ்மஸ் திருவிழா குடில் அமைத்து கொண்டாடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு
குட் சமாரிட்டன் நர்சரி பிரைமரி பள்ளியில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் வகையில் தத்ரூபமாக கிறிஸ்மஸ் குடில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்மஸ் சாண்டா பொம்மையும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை பள்ளியில் பயிலும் சிறுவர், சிறுமிகள் மற்றும் ஆசிரியர்கள் பார்வையிட்டனர்.
No comments