ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அண்ணா திடலில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் ரங்கசாமி.
புதுச்சேரி பொலிவுறு நகரத் திட்டத்தின்கீழ் அண்ணா திடலில் ரூ.9.6 கோடி மதிப்பீட்டில் சிறு விளையாட்டு அரங்கம் மற்றும் திடலைச் சுற்றி நகராட்சி கடைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை,முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து விளையாட்டு அரங்கத்தையும் கடைகளையும் பயன்பாட்டிற்குக் கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன், புதுச்சேரி பொலிவுறு நகர வளர்ச்சி நிறுவனத்தின் இணை தலைமை செயல் அலுவலர் ருத்ரகௌடு, புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, புதுச்சேரி பொலிவுறு நகர வளர்ச்சி நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் ரவிச்சந்திரன், பொது மேலாளர் துளசிங்கம், மேலாளர் மார்சல் சகாயநாதன் மற்றும் அதிகாரிகள் இந்த ஆய்வின்போது உடனிருந்தனர்.
No comments