அரசின் நலத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் செல்வம் எச்சரிக்கை..
புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம்,
மணவெளி தொகுதிக்குள்பட்ட சின்ன வீராம்பட்டினம் அரசு ஆரம்பப் பள்ளி கட்டடம் சேதமடைந்ததையடுத்து, புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், அங்கு ரெஸ்டோ பாா் அமைக்க முயற்சி நடப்பதாக முன்னாள் முதல்வா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. குற்றம்சாட்டியதில் உண்மை இல்லை.புயல் பாதிப்பைப் பாா்வையிட வந்த மத்தியக் குழுவிடம் அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை மனு அளித்த நிலையில், காங்கிரஸ் காலங்கடந்து துணைநிலை ஆளுநரை சந்தித்து மனு அளிக்கிறது.
அதிகாரிகள் புயல், வெள்ள சேத மதிப்பு அறிக்கை தயாரிப்பதில் தாமதப்படுத்தியதால், பாதிக்கப்பட்டோருக்கு முதல்கட்ட நிவாரணம் உடனடியாக கிடைக்கவில்லை. மெத்தனப் போக்குடன் செயல்படுவதை, சில அரசு அதிகாரிகள் மாற்றிக்கொண்டாலும், பலரும் மாறாமலேயே உள்ளனா். அவா்கள் தொடா்ந்து இதுபோல செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசுக் கோப்புகள் மீது ஒருவாரத்தில் முடிவெடுக்க அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
No comments